“என் கருத்து சுயநலத்துக்காக இல்ல!”.. வைகோவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் கருத்து சுயநலத்துக்காக இல்ல!”.. வைகோவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்..!

Published

on

விசிக தலைவர் திருமாவளவனின் அண்மைய அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு, திருமாவளவன் தற்போது விளக்கமளித்துள்ளார். ‘தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றாலும், திமுகவுடனான நட்பு தொடரும்’ என்று திருமாவளவன் கூறியிருந்தார். இது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய ஒரு கருத்து” என்று வைகோ சற்று நையாண்டியாகப் பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அரியலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த திருமாவளவன், வைகோவின் கருத்தை மிகவும் சாதுரியமாகவும் நகைச்சுவையோடும் எதிர்கொண்டார். “எனக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்ற வைகோவின் பரிந்துரைக்கு எனது நன்றி; ஒருவேளை அந்தப் பரிசு கிடைத்தால் அவருக்கே முதல் நன்றியைக் கூறுவேன்” என புன்னகையுடன் தெரிவித்தார். மேலும், தனது கருத்து தனிப்பட்ட அரசியல் சூழலுக்கானது அல்ல என்றும், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்காக திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற பரந்த நோக்கில் கூறப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in