LATEST NEWS
ஆசிரியர் செய்யும் காரியமா இது?தன் மகளுடன் பழகிய சிறுவனை மயக்கினாரா? 25,000க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்கள்..இணையதளத்தை அதிர வைக்கும் தகவல்..!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 44 வயதான சிறப்புக்கல்வி ஆசிரியை அலிசன் ஹேவ்மேன்-நீட்ராச், 15 வயது மாணவன் ஒருவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து அவர் கைது செய்யப்பட்ட ஜூன் மாதம் வரை, இருவருக்கும் இடையே சுமார் 25,000-க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பள்ளியின் துணை முதல்வர் மற்றும் சக ஆசிரியர் ஒருவர், ஆசிரியை அந்த மாணவனை முறையற்ற வகையில் தொடுவதையும் பழகுவதையும் கவனித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன்பேரிலேயே இந்த அதிர்ச்சியூட்டும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல் துறை விசாரணையின் தொடக்கத்தில், அந்த மாணவன் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ஆசிரியையின் மகளுடன் மட்டுமே தான் பழகி வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கைப்பேசியில் இருந்த பல்லாயிரக்கணக்கான குறுஞ்செய்திகள் அவர்களின் ரகசிய உறவை உறுதி செய்தன. இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்திற்குத் தனது தாயுடன் வந்த அந்தச் சிறுவன், ஆசிரியையுடன் தனக்கு இருந்த பாலியல் தொடர்பை ஒப்புக்கொண்டான். இதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஏழு கடுமையான குற்றச்சாட்டுகள் அலிசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன; அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
