குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்..! பட்ஜெட்டில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. முதலில் யாருக்கு கிடைக்கும்..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத் தலைவிகளுக்கு ஜாக்பாட்..! பட்ஜெட்டில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை.. முதலில் யாருக்கு கிடைக்கும்..??

Published

on

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 15-ஆம் தேதி வழக்கம்போல் ரூ.1,000 பெறும் தகுதியுள்ள பயனாளிகளுக்கே, இந்த உயர்த்தப்பட்ட தொகையும் முதலில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த மெகா திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவிகள் அனைவரும் நேரடியாகப் பயனடைவார்கள் என்பதால், இது பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதி உதவி எவ்விதத் தடையுமின்றி தங்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வந்து சேர்வதை உறுதி செய்யப் பயனாளிகள் சில முக்கிய ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, பயனாளிகள் அனைவரும் தங்களின் தற்போதைய வங்கிக் கணக்குச் செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், அதனுடன் ஆதார் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in