LATEST NEWS
மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2500… தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு.. செம குஷியில் பெண்கள்….!!
தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 நிதி உதவி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத் தலைவிகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் விரிவான அறிவிப்பை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்ட விரிவாக்கத்தின் கீழ், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தகுதியுடைய புதிய பயனாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிதிநிலை மற்றும் நிர்வாகச் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, விடுபட்ட தகுதியான மகளிரையும் இதில் இணைப்பதற்கான ஆலோசனைகள் தற்பொழுது அரசு மட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே புதிய பயனாளர்களைத் தேர்ந்தெடுத்து இந்த விண்ணப்பப் பதிவு மற்றும் சரிபார்ப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வரவிருக்கும் ஜூலை மாத பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்த கூடுதல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனப் பெண்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
