LATEST NEWS
BREAKING: இனி அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால்.. தமிழக அரசு எச்சரிக்கை..!!
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதியின்றி ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதித்து தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபகாலமாகப் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் மோகம் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளின் தனியுரிமை மற்றும் அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளையோ அல்லது நோயாளிகளையோ அவர்களின் அனுமதியின்றி வீடியோ அல்லது ரீல்ஸ் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே அனுமதியின்றி எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
