LATEST NEWS
பாஸ் கொடுத்தும் நோ என்ட்ரி!.. செய்தியாளர்கள் அதிரடியாக வெளியேற்றம்.. நடந்தது என்ன?.. கரூரில் விஜய் மக்கள் சந்திப்பில் பயங்கர பரபரப்பு..!!
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்குப் பிரம்மாண்டமான அரசுப் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், கருணை அடிப்படையில் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் கரங்களால் வழங்கினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் திடீரென வெளியேற்றப்பட்டதால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
செய்தி சேகரிப்பதற்காக முன்னதாகவே ஊடகப் பிரிவினருக்கு உரிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்த நிலையிலும், அரங்கிற்குள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீடியாக்கள், அங்கிருந்த நிர்வாகிகளுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில், கரூர் மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் நேரடியாக நிகழ்விடத்திற்குச் சென்று, அங்கிருந்த மீடியாக்களை வெளியாற்றியதால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது. செய்தி சேகரிக்கும் தங்களின் ஜனநாயகக் கடமைக்கு இவ்வாறு தன்னிச்சையாகத் தடை விதிப்பது எந்த வகையில் நியாயம் என்றும், அனுமதிச் சீட்டு கொடுத்த பின் வெளியேற்றுவது சரியா என்றும் அங்கிருந்த செய்தியாளர்கள் காவல்துறையினரிடமும் அமைப்பாளர்களிடமும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
