DISTRICT NEWS
பகீர்!.. காய்ச்சலுக்கு மருந்து கொடுத்த சில நிமிடங்களில் நடந்த விபரீதம்.. துடிதுடித்து இறந்த பச்சிளம் குழந்தை.. கதறும் பெற்றோர்..!!
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், குட்டச்சிவளவு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் – சித்ரா தம்பதிக்குக் கடந்த 42 நாட்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் சூழலில், அந்தக் குழந்தைக்குக் கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று காலை தாய் சித்ரா தனது குழந்தைக்குக் காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்தை ஊட்டியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த மருந்தின் எதிர்வினையால் குழந்தைக்கு திடீரென்று சுவாசிப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டது. இதனால் பதறிய பெற்றோர்கள் குழந்தையை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
