LATEST NEWS
FLASH: கரூரில் தற்காலிக பணி ஆணை வழங்குக… நீதிமன்றம் சற்றும் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…!!
கரூரில் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட அவசர வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, பணி ஆணை வழங்குவதற்கு இன்று தடை ஏதும் இல்லை என்றும், ஆனால் இந்த நியமனங்கள் தற்காலிகமானது (Temporary) மட்டும்தான் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கின் இறுதி முடிவை நீதிமன்றமே பின்னர் தீர்மானிக்கும் எனக் கூறி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் விஜய் இன்று பணி ஆணைகளை வழங்க வழிவகை ஏற்பட்டுள்ள போதிலும், பாதிக்கப்பட்டவர்களின் பணி நிலைத்தன்மை என்பது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்தே அமையவுள்ளது.
