LATEST NEWS
அரே பாஜி… கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்கப்பா..! ரன் அவுட் குழப்பத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை கலாய்த்த அபிஷேக் சர்மா..! வைரலாகும் வீடியோ..!!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டியின் போது, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் இருவரும் இணைந்து அதிரடியாக ரன் குவித்து வந்த போது, ஒரு ரன் எடுப்பதில் இருவருக்கும் இடையே சிறிய குழப்பம் ஏற்பட்டது. இதனால் அபிஷேக் சர்மா ரன் அவுட் ஆபத்தில் இருந்து நூலிழையில் தப்பினார்.
ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய பின்னர், அபிஷேக் சர்மா தனது சக வீரரான ஸ்ரேயாஸ் ஐயரிடம் இந்தி மொழியில், “அரே பாஜி, தோடா ஜல்தி கரோ யார்” என்று வேடிக்கையாகக் கூறினார். அதாவது, “அண்ணே, கொஞ்சம் சீக்கிரம் முடிவெடுங்க, நீங்க ரெண்டு அடி முன்னாடி வந்துட்டு அப்புறம் பின்னாடி போறீங்க…” என்று ரன் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து மைதானத்திலேயே விளையாட்டாகக் கடிந்து கொண்டார். அவர்களின் இந்த வேடிக்கையான உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் மிகத் தெளிவாகப் பதிவாகியது.
மைதானத்தில் பதற்றமான சூழ்நிலையிலும் பதற்றப்படாமல், இருவரும் சிரித்த முகத்துடன் இந்தத் தவறை ஒரு நகைச்சுவையான தருணமாக மாற்றினர். ஸ்டம்ப் மைக்கில் பதிவான இந்த ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 68 ரன்களும், அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ரன்களும் குவித்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
