DISTRICT NEWS
“இனி தமிழ்நாடே விஜய் கையில தான்!” –கரூரில் மாஸ் காட்டிய விஜயபாஸ்கர்..இணையத்தைக் கலக்கும் பேச்சு..!
கரூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பு விழாவில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெள்ளி வாள் ஒன்றை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார். கடந்த ஆண்டு இதே பகுதிக்கு ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே வருகை தந்த அவர், குறுகிய காலத்திற்குள் மாபெரும் வளர்ச்சி கண்டு முதலமைச்சராக உயர்ந்து மீண்டும் கரூரில் அடியெடுத்து வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய விஜயபாஸ்கர், மாவட்ட மக்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் சார்பில் அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆரின் அன்பும், ஜெயலலிதாவின் தைரியமும் ஒருங்கே அமைந்த தலைவராக விஜய் உருவெடுத்துள்ளதாகப் புகழ்ந்த அவர், எம்.ஜி.ஆர் எப்படி ஆரம்பகால விமர்சனங்களைத் தாண்டி தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராகி சரித்திரம் படைத்தாரோ, அதே பாணியில் விஜய்யின் அரசியல் பயணமும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ‘விடியல்’ தருவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் தங்களுக்கு மட்டுமே நன்மைகளைச் செய்துகொண்டதாக விமர்சித்த அவர், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ள விஜய்யின் கரங்களில்தான் இனி தமிழ்நாட்டின் நிரந்தர எதிர்காலம் உள்ளது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
