DISTRICT NEWS
“உன்ன தான் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே… திரும்ப எப்படி வந்த..?” கெத்து காட்டிய டிஸ்மிஸ் ஊழியர்… அரசு அலுவலகத்தில் நடந்த அதிரடி வாக்குவாதம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரால் நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியுமின்றி மீண்டும் அலுவலகத்திற்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்து பணிபுரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், “உன்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே… திரும்ப எப்படி வந்த? யாருடைய உத்தரவின் பேரில் வந்த?” என்று கேள்வி எழுப்பி அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“டிஸ்மிஸ் ஆனவர்தானே நீ..? அப்புறம் எப்படி இங்க வந்த?”
தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு – சக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்
மாவட்ட ஆட்சியரால் நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பணியாளர், எந்த அனுமதியும் பெறாமல் மீண்டும் பணிக்கு வந்து தனது இருக்கையில்… pic.twitter.com/f1Mwuzo6oA— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) July 26, 2026
நீக்கப்பட்ட ஒரு நபர் அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து தன்னிச்சையாகப் பணிகளை மேற்கொண்டதும், அதற்குச் சக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததும் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
