14 CM-கள் மீது குற்ற வழக்குகள்… அதிர்ச்சி அளிக்கும் இந்திய முதலமைச்சர்களின் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

14 CM-கள் மீது குற்ற வழக்குகள்… அதிர்ச்சி அளிக்கும் இந்திய முதலமைச்சர்களின் பின்னணி..!!

Published

on

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்தம் 31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 11 பேர் மீது கடத்தல், கொலை முயற்சி மற்றும் லஞ்சம் போன்ற தீவிரமான குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த முதலமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பெருமளவிலான குற்ற வழக்குகளும், கோடிக்கணக்கிலான சொத்துக்களும் கொண்ட நபர்களை எந்த அடிப்படையில் மக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற கேள்வியையும் ஆதங்கத்தையும் அரசியல் விமர்சகர்கள் தீவிரமாக எழுப்பி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in