CINEMA
என்ன காரணமா இருக்கும்?”சுவாசிகா சினிமாவை விட்டே விலக நினைத்தது ஏன்?வைரலாகும் பேட்டி..!
மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை சுவாசிகா, ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறப்பான அறிமுகத்தை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய திறமையான மற்றும் எதார்த்தமான நடிகை என்ற பெயரையும் குறுகிய காலத்திலேயே அவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து சூர்யா நடித்த ‘கருப்பு’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அதன்பிறகு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்த ‘நூறு சாமி’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் சுவாசிகாவின் நடிப்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டதோடு, இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருதுப் போட்டியிலும் அவரை முன்னிலையில் நிறுத்தியுள்ளது.
திரையுலகில் தற்போது வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் சுவாசிகா, தனது தொடக்கக் காலத்தில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்துள்ளார். சமீபத்தில் வைரலான பேட்டி ஒன்றில் இதுகுறித்து மனம்திறந்த அவர், சினிமா வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் பல போலி மேனேஜர்களை நம்பி பெரும் தொகையை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக தனது தாயார் நகைகளைக் கொடுத்த சம்பவங்களையும், வாய்ப்பு தருவதாகக் கூறி அவர்கள் அழைத்துச் சென்ற இடங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருந்ததால் பயந்துபோய் தனது தாய் தன்னை சினிமாவை விட்டே விலகச் சொன்னதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். இத்தனை தடைகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்தபோதும், மீண்டும் மலையாள சினிமாவில் முயற்சித்து முன்னேறிய அவர், தன் மீதான நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை என்பதே அவரது தற்போதைய வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
