LATEST NEWS
“சரியான பதிலடி!” – சிகரெட் குடித்த நபருக்கு ஓட்டுநர் கொடுத்த ஷாக்!இணையத்தை கலக்கும் கேப் டிரைவரின் தைரியம்..!!
சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வாடகை காரில் பயணித்த நபர் ஒருவர் அனுமதியின்றி சிகரெட் குடித்ததால், ஓட்டுநர் அந்த பயணத்தை பாதியிலேயே ரத்து செய்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘காரை நான் தான் முன்பதிவு செய்துள்ளேன், எனவே புகைப்பிடிக்க யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை’ என அந்த பயணி வாதிட்டுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுத்த ஓட்டுநர், ‘இது என்னுடைய சொந்த வாகனம், இதில் எனது விதிமுறைகள் தான் பின்பற்றப்பட வேண்டும். நான் ஓட்டுநரே தவிர உங்களுக்கு வேலையாள் இல்லை’ என்று துணிச்சலாகக் கூறி, அவரது பணத்தை நிராகரித்து பயணியை காரை விட்டு உடனடியாக வெளியேற்றினார்.
எக்ஸ் தளத்தில் பேசுபொருளாகியுள்ள இந்த நிகழ்வை பார்த்த இணையவாசிகள் பலரும், ஓட்டுநரின் இந்த தைரியமான முடிவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஒரு பயணி கட்டணம் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்தாலும், அந்த வாகனம் ஓட்டுநருக்கே சொந்தமானது என்றும், அதில் புகைப்பிடிப்பதை தடை செய்ய அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பொது இடங்கள் மற்றும் மூடிய வாகனங்களில் புகைப்பிடிப்பது பிறரது உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதால், ஓட்டுநர் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் எடுத்த இந்த முடிவு முற்றிலும் நியாயமானது என நெட்டிசன்கள் தங்களது ஆதரவை பதிவு செய்துள்ளனர்.
