LATEST NEWS
“என் வாழ்வில் அதிக வலி அதுதான்.. என் மீது அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செஞ்சாங்க”.. கரூரில் வட்டியும் முதலுமாக திருப்பி அடித்த முதலமைச்சர் விஜய்..!!
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மக்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்தார். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் சில வலிகளையும் காயங்களையும் மறக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கரூரில் நடந்த துயரச் சம்பவமே தனது மனதில் அதிக வலி தருவதாகக் கூறினார். மேலும், தான் வலியுடன் வீட்டில் இருந்தபோது ‘ஓடி ஒளிந்துவிட்டான்’ என ஏளனமாகப் பேசி, தன் மீது பழிபோட்டதாகவும், சட்டசபையில் ஸ்டாலின் தன் மீது அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தனக்கு வலி தந்த அனைவருக்கும் மக்கள் கடந்த 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், காலத்திற்கும் அவர்கள் எழுந்திராத வகையில் தொடர்ந்து பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“பணமா, ஜனமா என்றால் எனக்கு என் ஜனம் தான் முக்கியம்” என்று முழங்கிய முதலமைச்சர் விஜய், உங்களை விடத் தமக்குக் காசு பணம் முக்கியமல்ல என்றும், இதுபோல் மற்றவர்களால் சொல்ல முடியுமா என்றும் வினவினார். கட்சி நிதி என்று சொன்ன உடனேயே எதிர்க்கட்சியினர் சட்டசபையிலிருந்து எப்படி ஓடினார்கள் தெரியுமா என்று விமர்சித்த அவர், தற்போதைய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் ஊழல் இன்றி வேலைகள் தொடர்ந்து நடப்பதாகக் குறிப்பிட்டார். காவல்துறையினர் முன்கூட்டியே கூட்ட நெரிசல் குறித்து எச்சரித்திருக்கலாம் அல்லது நிகழ்வை ரத்து செய்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், நெடுஞ்சாலையிலிருந்து போலீசாரே அழைத்து வந்த நாடகத்தைத் தான் நம்பி ஏமாந்துவிட்டதாகவும், தன் திரைப் படத்தைப் பார்த்து முத்தம் கொடுத்த சகோதரியின் பிள்ளைகளை இழந்து நிற்பதாகவும் மிகுந்த வேதனையுடன் அந்த மக்கள் சந்திப்பில் பேசி முடித்தார்.
