“கூட்டுக்களவாணிகளா” நீங்க ரெண்டு பேரும் யாருன்னு எனக்கு தெரியும்… உங்களால இதை நிரூபிக்க முடியுமா..? திமுக, அதிமுகவிற்கு விஜய் சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கூட்டுக்களவாணிகளா” நீங்க ரெண்டு பேரும் யாருன்னு எனக்கு தெரியும்… உங்களால இதை நிரூபிக்க முடியுமா..? திமுக, அதிமுகவிற்கு விஜய் சவால்..!!

Published

on

கரூரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்யவுள்ளதாக வரும் செய்திகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இதனைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அவர் மிகக் கடுமையாகச் சாடினார். “திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், முடிந்தால் வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதனை அவர்கள் நிரூபித்துக் காண்பிக்கட்டும் என்று பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.

Advertisement

மேலும், இந்த இரு கட்சிகளையும் ஒப்பிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், “இந்த தீய சக்தியும், தீர்ந்த சக்தியும் வேறு வேறு இல்லை; இருவருமே கூட்டுக்களவாணிகள்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். தவெக தலைவர் விஜய்யின் இந்த அதிரடியான பேச்சு தமிழக அரசியல் அரங்கில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in