“ஓடு ஓடு ஓடு… அப்ப தனி விமானம் பிடிச்சு ஓட்டுனது யாருன்னு ஊருக்கே தெரியும்”.. விஜய்க்கு செந்தில் பாலாஜி கொடுத்த மரண அடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஓடு ஓடு ஓடு… அப்ப தனி விமானம் பிடிச்சு ஓட்டுனது யாருன்னு ஊருக்கே தெரியும்”.. விஜய்க்கு செந்தில் பாலாஜி கொடுத்த மரண அடி..!!

Published

on

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குவது, புதிய தொழில்துறைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் இன்று கலந்துகொண்டார். அப்போது நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். முதலமைச்சர் விஜய்யின் இந்த உரைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமாக எதிர்வினையாற்றியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது, செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் உயிரைக் காத்துத் துயரைத் துடைத்தவர்கள் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது பேச்சைத் தொடர்ந்து பேசியது யார் என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கரூரில் பலர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓட்டம் பிடித்தது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று முதலமைச்சர் விஜயைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், தனது பதிவின் இறுதியில் “ஓடு. ஓடு.. ஓடு…” என்றும் சாடியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in