SPக்கே தெரியாத அந்த விஷயம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது..? 40 உடல்களை இரவோடு இரவாக.. புது குண்டை தூக்கிப்போட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

SPக்கே தெரியாத அந்த விஷயம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது..? 40 உடல்களை இரவோடு இரவாக.. புது குண்டை தூக்கிப்போட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Published

on

கடந்த ஆண்டு கரூர் தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விபத்து குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானத்தில் சென்றது யார் என்ற செந்தில் பாலாஜியின் விமர்சனத்திற்குப் பதிலளித்த நிர்மல்குமார், கரூர் விபத்து சம்பவத்தில் திமுகவினர் திட்டமிட்டு ஆதாரங்களை அழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில், விபத்து நடந்த 5 நிமிடத்தில், அதிகாரிகள் அறியும் முன்பே செந்தில் பாலாஜி கேமராக்களுடன் மருத்துவமனைக்குச் சென்றது எப்படி என கேள்வி எழுப்பினார். மேலும், நள்ளிரவில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவசரமாக வந்ததும், 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உடற்கூறாய்வுக்கு ஏற்பாடு செய்ததும், 40 உடல்களை இரவோடு இரவாகத் தகனம் செய்ததும் சதித் திட்டம் என நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். தவெக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, விபத்து ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து பேசிய நிர்மல்குமார், அமலாக்கத்துறை கைது நடவடிக்கையின்போது மருத்துவமனைக் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து அழுது கதறிய செந்தில் பாலாஜிக்கு தவெக அரசை விமர்சிக்கத் தகுதி இல்லை என்று சாடினார். மேலும், தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி ஆட்சியைத் கவிழ்க்க முயன்ற வழக்கில், செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களிடம் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்டுள்ளதாகவும் அவர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in