அதிமுகவிற்கு இரட்டை அதிர்ச்சி..! தவெகவில் வேலுமணி… பாஜகவில் தங்கமணி… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவிற்கு இரட்டை அதிர்ச்சி..! தவெகவில் வேலுமணி… பாஜகவில் தங்கமணி… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

Published

on

அதிமுகவின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய இருவரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த தகவல், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தது மற்றும் அடுத்தடுத்து 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே அதிமுகவை பலவீனப்படுத்தியிருந்தன. இந்நிலையில், இந்த இரு மூத்த தலைவர்களும் தொடக்கத்தில் ஆளுங்கட்சியான திமுகவுடன் இணைய முயன்றதாகவும், ஆனால் செந்தில் பாலாஜியின் கடும் எதிர்ப்பு மற்றும் இவர்களின் பாஜக நெருக்கம் காரணமாக திமுக இவர்களை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கையை விரித்ததைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி தவெக நோக்கியும், தங்கமணி பாஜக நோக்கியும் தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர். குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி தவெகவிற்குள் செல்ல விரும்பினாலும், அங்கு ஏற்கனவே அதே மாவட்டத்தைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் இருப்பதும், குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜின் அசுர வளர்ச்சியும் தனது அரசியல் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என அவர் கணித்துள்ளார். இதன் காரணமாகவே, தவெக முடிவைக் கைவிட்டு, தற்போது தங்கமணி பாஜகவில் இணைவதற்கான தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in