CINEMA
பழம்பெரும் பாடகி எஸ். ஜானகி காலமானார்.. தமிழக முதல்வர் விஜய் இரங்கல்..!!
மூத்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவிற்குத் தமிழக முதல்வர் விஜய் தனது அசாத்திய இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது தனித்துவமான குரல் வளத்தால் பல தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களை வென்ற ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தி, தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது இனிமையான குரலும், இசைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களில் அவரை என்றும் அழியாமல் நிலைநிறுத்தும் என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி முத்திரை பதித்த ஜானகி அம்மாவின் இந்த மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு என்று குறிப்பிட்டு, அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
