LATEST NEWS
“6 மணிக்கு மேல என்ன நடக்குதுன்னு அவருக்கு தெரியாது!”.. CM விஜய்யை மீண்டும் சீண்டிய அனிதா ராதாகிருஷ்ணன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக முதல்வர் விஜய் குறித்து மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே முதல்வர் விஜய்க்குத் தெரியாது” என்று ஒருமையில் தாக்கிப் பேசினார். மேலும், விஜய்யின் அரசியல் நடிப்பு இனிமேல் தமிழக மக்களிடம் செல்லுபடி ஆகாது என்றும், வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுகவே மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த காலங்களில் முதல்வர் விஜய் குறித்து அவதூறான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிய விவகாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் முதல்வர் என்று கூட பாராமல், பொது மேடையில் ஒருமையில் விமர்சித்திருப்பது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இடையேயான அரசியல் மோதலும், வார்த்தைப் போரும் தற்போதைய சூழலில் மேலும் தீவிரமடைந்துள்ளது.
