LATEST NEWS
தமிழகம் முழுவதும் அதிரடி கைது… சிங்கப்பெண் அதிரடிப்படை செய்த மாஸ் சம்பவம்.. DGP வெளியிட்ட அறிக்கை..!!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் கீழ், வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் நான்கு பேர் இந்த காலகட்டத்தில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த அதிரடிப்படை, இந்த குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் வந்த 371 புகார்களுக்குச் சம்பவ இடத்திற்கே நேரில் சென்று உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த புகார்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
