LATEST NEWS
“தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்!”.. டிடிவி தினகரனை நாராகக் கிழித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.. அலறும் அரசியல் களம்..!!
டிடிவி தினகரன் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிடிவி தினகரன் காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்பவர் என்றும், சுயநலத்திற்காக முடிவுகளை எடுக்கும் அவர், இன்னும் சிறிது காலத்திற்கு எதைப் பற்றியும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “தூயசக்தி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு நாசக்கார சக்தியுடன் அதிமுகவினர் இணையும்போது, தமிழகத்தின் நலனுக்காக திமுகவும் அதிமுகவும் இணைந்தால் என்ன தவறு?” என்று டிடிவி தினகரன் பேசியிருந்தார். அவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொண்டர்களின் நிலையைச் சுட்டிக்காட்டி இந்த அதிரடி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
