LATEST NEWS
“அதில் நான் சக்ரவர்த்தியாடா” வேலை முடிஞ்சும் பாசாங்கு செய்யும் 80% Gen Z ஊழியர்கள்… பணிச்சுமைக்கு அஞ்சி நேரத்தைக் கடத்துவதாக அதிரடி ஆய்வில் தகவல்..!!
இன்றைய Gen Z ஊழியர்களின் வேலை கலாச்சாரம் குறித்த சுவாரசியமான ஒரு ஆய்வை விளக்குகிறது. Software Finder நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, சுமார் 80% Gen Z ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடித்த பிறகும், இன்னும் வேலை செய்து கொண்டிருப்பது போலவே நடிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தங்களுக்கு வேலை இல்லை என்று தெரிந்தால் மேலாளர்கள் மேலும் பல வேலைகளைக் கொடுத்து பணிச்சுமையை (Workload) அதிகரித்து விடுவார்கள் என்ற பயத்தினாலேயே அவர்கள் இவ்வாறு செய்வதாகக் கூறியுள்ளனர்.
இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பதற்காகப் பல்வேறு சுவாரசியமான வழிகளைக் கையாளுகின்றனர். கணினியின் Mouse-ஐ தேவையின்றி கிளிக் செய்து கொண்டே இருப்பது, மெசேஜ்களுக்குத் தாமதமாகப் பதில் அளிப்பது மற்றும் லேப்டாப்பில் தேவையில்லாத பல Tab-களைத் திறந்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு நேரத்தைக் கடத்துகிறார்கள். வேலை முடிந்துவிட்டாலும் சும்மா இருந்தால் மேலாளர் தவறாக நினைப்பாரோ என்ற பயமும், கூடுதல் பணிச்சுமை வந்துவிடுமோ என்ற கவலையும் தான் இத்தகைய போக்கிற்கு முக்கியக் காரணமாக இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
