LATEST NEWS
இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு..!!
மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட உரிமைத் தொகையானது, முதலில் ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் தற்போதைய பயனாளிகளுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு இதுவரை தேர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவற்றில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட பிறகே, புதிய விண்ணப்பங்கள் பெறுவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
