LATEST NEWS
“ஐயோ டீச்சர்.. இது அசிங்கம்” 16 வயது மாணவனுடன் உல்லாசம்… ஆபாச சாட்டிங்கை பார்த்து போலீசில் காட்டி கொடுத்த கணவன்.. “ஆமா நா தப்பு செஞ்சேன்”.. உண்மையை ஒப்புக்கொண்ட குற்றவாளி..!!
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள செயின்ட் ஜான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான மெக்கன்சி நாட் என்ற முதலாம் வகுப்பு ஆசிரியை, 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவனுடன் பாலியல் ரீதியான முறைகேட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே மாதம் ஆசிரியையின் கணவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவரது கைப்பேசியைச் சோதித்தபோது இந்த விவகாரம் தெரியவந்தது. அதில் பள்ளி மாணவனுடன் நெருக்கமாகப் பேசப்பட்ட ஆபாசக் குறுஞ்செய்திகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாகக் காவல்துறையிடம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஸ்னாப்சாட் (Snapchat) சமூக வலைதளம் மூலம் அந்த ஆசிரியை அறிமுகமாகி நெருக்கம் ஏற்பட்டுள்ளது அம்பலமானது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஆசிரியை மெக்கன்சி நாட், அந்த மாணவனைத் தனது காரில் ஏற்றி மக்கள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவன் மறுப்பு தெரிவித்து, நிறுத்தச் சொல்லிய நிலையிலும் ஆசிரியை அவருடன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான். மாணவனின் இந்த வாக்குமூலத்தை காரில் பதிவான தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் பயணத் தரவுகள் மூலம் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
ஆரம்பத்தில் முத்தமிட்டதை மட்டுமே ஒப்புக்கொண்ட ஆசிரியை மெக்கன்சி நாட், காவல்துறையினர் திரட்டிய வலுவான ஆதாரங்களை அடுத்து மாணவனுடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்த சில நாட்களிலேயே அவரது கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மாணவன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 6 முதல் 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
