LATEST NEWS
மக்களே..! “100 ரூபா இருந்தாலும் கொடுங்க போதும்” முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அமைச்சர் அருண்ராஜ் உருக்கமான வேண்டுகோள்..!!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீன உபகரணங்களை வழங்கவும் முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய், ‘நலம் டி.என் என்ற புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் . இத்திட்டத்தின் கீழ் ரூ.139.47 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டதுடன், 2,144 மருத்துவ பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன .
மக்கள நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், பொதுமக்கள் தாராளமாக முன்வந்து மருத்துவமனை மேம்பாட்டிற்கு நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார் . அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.100 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என்றும், முக்கிய விசேஷ நாட்களில் மக்கள் பங்களிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார் .
‘நலம் டி.என்’ தளம், சிஎஸ்ஆர் நிதி மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை நேரடியாகவும், பாதுகாப்பாகவும் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது . இந்தத் தளம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே, அப்போலோ மற்றும் கேப்லின் பாயிண்ட் லேபராட்டரிஸ் போன்ற பெரு நிறுவனங்கள் தலா ரூ.1 கோடி நிதி உதவியை வழங்கியுள்ளன .
