LATEST NEWS
“விஜய்யைக் குறிவைக்கும் காக்ரோச் ஜனதா கட்சி” தவெக-வுக்கு திடீர் ஆதரவு கொடுப்பதன் பின்னணி என்ன..? 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாஸ்டர் பிளான்..!!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய அரசியல் அமைப்பான காக்ரோச் ஜனதா கட்சி சமூக வலைதளங்கள் மற்றும் பொது மேடைகள் மூலம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் விஜய் மற்றும் தவெக குறித்து வெளியாகும் சாதகமானப் பதிவுகள், இந்த அரசியல் ஆதரவுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய கணக்குகள் இருக்குமோ என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இந்தத் திடீர் ஆதரவு நகர்வுகளுக்குப் பின்னால் முக்கியக் காரணமாக 2029 நாடாளுமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த அரசியல் அணுகுமுறையைக் காக்ரோச் ஜனதா கட்சி கையாண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டைத் தாண்டியும் விஜய்க்குத் தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் பரந்த திரைப்பட ரசிகர் பட்டாளம் மற்றும் மக்கள் செல்வாக்கு, எதிர்காலக் கூட்டணியில் தங்களுக்குத் கைகொடுக்கும் என அக்கட்சி மதிப்பிடுகிறது.
இருப்பினும், தவெகவுடன் எதிர்காலத்தில் ஒரு நெருக்கமான நட்புறவை அல்லது அரசியல் ஒத்துழைப்பை உருவாக்கும் நோக்கில் காக்ரோச் ஜனதா கட்சி இந்த அணுகுமுறையை எடுத்திருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான தேர்தல் கூட்டணியோ அல்லது அரசியல் ஒப்பந்தமோ ஏற்படவில்லை. எனவே, 2029 பொதுத்தேர்தலை முன்னிட்டு தென்னிந்தியாவில் உருவாகக்கூடிய புதிய அரசியல் சமன்பாடுகளின் ஒரு யூகமாகவே இந்த நகர்வுகள் பார்க்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
