CINEMA
“கடந்த சில நாட்கள் சவாலானது”.. மார்பக புற்றுநோயுடன் போராடும் ‘சொக்கத் தங்கம்’ நடிகை.. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான பதிவு..!!
பிரபல பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மூத்த மகளும், தமிழ் திரையுலகின் பரிச்சயமான முகமுமான நடிகை உமா சங்கரிக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சீமானின் வீரநடை படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர், சொக்கத் தங்கம், தென்றல் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக, விஜயகாந்தின் தங்கை வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு துஷ்யந்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, அவர் கலைத்துறையை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்தார். தற்போது இவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான இரண்டாவது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
https://www.instagram.com/p/Dax22Nkzzk3/?utm_source=ig_embed&ig_rid=AWIxQCZ47vX008do5M8bZu2
இந்தச் சவாலான சூழல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமா சங்கரி, கடந்த சில நாட்கள் மிகவும் கடினமானதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த நோய்ப் போராட்டத்தை முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு வருவதாகவும், தனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கையையும் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
