LATEST NEWS
“கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு… கணவரைப் பிரிந்த மனைவிக்கு விவாகரத்து கிடையாது..!” மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!
இந்த வழக்கில் கணவன், மனைவி இருவருக்கும் 2015-இல் திருமணம் நடந்துள்ளது. தமக்குக் கணவர் வீட்டாரால் வரதட்சணை கொடுமை, உடல் ரீதியான வன்முறை மற்றும் சித்திரவதை ஏற்பட்டதாகக் கூறி மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், குடும்ப நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அந்தப் பெண் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். அலுவாலியா மற்றும் அனுராதா சுக்லா அடங்கிய அமர்வு, வழக்கின் ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்தது. அப்போது, கணவர் வீட்டில் கொடுமை நடந்ததாக அந்தப் பெண் கூறிய புகார்கள் அனைத்தும் மிகவும் பொதுப்படையானதாகவும், ஆதாரமற்ற வதந்திகளாகவும் இருப்பது தெரியவந்தது. மாறாக, அந்தப் பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கணவர் வீட்டை விட்டு வெளியேறியதும், அவர் திருமணத்திற்குப் புறம்பான கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருந்ததும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இந்து திருமண சட்டம் 1955, பிரிவு 23-இன் படி, தவறு செய்த ஒரு நபர் தனது சொந்தத் தவறையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நீதிமன்றத்தில் நிவாரணம் தேட சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு, தன்னிச்சையாக கணவனைப் பிரிந்து சென்ற மனைவிக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று கூறி, குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம், பெண்ணின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
