திமுக அரசுக்கு அடுத்த ஷாக்..! 35 முக்கிய டெண்டர்கள் அதிரடி ரத்து… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுக அரசுக்கு அடுத்த ஷாக்..! 35 முக்கிய டெண்டர்கள் அதிரடி ரத்து… முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

Published

on

நிர்வாகக் காரணங்களுக்காகத் தமிழகத்தில் 35 முக்கிய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உடுமலையில் 30, கோத்தகிரியில் 3 மற்றும் செங்கத்தில் 2 டெண்டர்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் திடீர் நடவடிக்கை தற்போதைய திமுக அரசுக்கு அடுத்தடுத்த பின்னடைவாகவும், பெரும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, திமுக அரசு கொண்டு வந்த திருவான்மியூர் – உத்தண்டி இடையேயான 4 வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாலைத் திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், சமூக ஊடகங்களிலும் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in