“விஜய் தலையில நங்கு நங்குனு குட்டி” “கைது பண்ணா அலங்கோலம் மறைஞ்சிடுமா..? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் தலையில நங்கு நங்குனு குட்டி” “கைது பண்ணா அலங்கோலம் மறைஞ்சிடுமா..? தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்..!!

Published

on

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசு தனது ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்களையும், மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியையும் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்திய கைது நடவடிக்கைகள் மூலம் சரிக்கட்டிவிடலாம் என்று தவறாக நினைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த அரசு தனக்கு எதிராக எழும் நியாயமான விமர்சனங்களை அடக்குவதற்காகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றின் தலையங்கத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ஆட்சிக்கு எதிராக வரும் கருத்துச் சுதந்திரத்தை இந்த அரசு முடக்கப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். தற்போதைய முதலமைச்சர் விஜய்க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், அந்தப் புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகை தனது தலையங்கத்தின் வாயிலாக முதலமைச்சரின் தலையில் “நங்கு நங்கென்று” குட்டி, அவரது தவறான போக்கை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளது என்று எம்.கே. ஸ்டாலின் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in