100 கோடி கொடுத்தாலும்… அந்தப் பக்கம் போகமாட்டேன்..! அதிர்ச்சி கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!! – cinefeeds
Connect with us

CINEMA

100 கோடி கொடுத்தாலும்… அந்தப் பக்கம் போகமாட்டேன்..! அதிர்ச்சி கிளப்பும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

Published

on

மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, தமிழில் ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் திடீரென விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

சமூக வலைதளங்களில் இருந்து விலகியதற்கான காரணத்தைப் பகிர்ந்த அவர், தனது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் கருத்துக்களைப் பதிவிட்டதால் மிகவும் மனவேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தச் சமயத்தில் இந்த உலகமே தனக்கு எதிராக இருப்பது போன்றும், அனைவரும் தன்னை வெறுப்பது போன்றும் உணர்ந்ததாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

Advertisement

தற்போது சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருப்பது தனக்கு மிகுந்த மன அமைதியைத் தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது ரூ. 100 கோடி கொடுத்தாலும் இனி மீண்டும் சமூக வலைதளங்களின் பக்கம் வர மாட்டேன் என்றும், ஆன்லைனில் பழகுவதை விட மக்களை நேரில் சந்தித்துப் பேசுவதையே அதிகம் விரும்புவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in