LATEST NEWS
மாப்ள… வைஃப்னா இப்படி இருக்கணும்..! புருஷனை மீட்டெடுக்க கேங்ஸ்டரின் அம்மாவையே கிட்னாப் செய்து… அலறவிட்ட லேடி சூப்பர்ஸ்டார்..!!
2016-ஆம் ஆண்டு மெக்சிகோவின் சான் மிகுவல் தொதோலாபன் பகுதியில் ‘எல் தெக்விலெரோ’ என்ற பிரபல கேங்ஸ்டர் கும்பல், ஐசாயாஸ் வால்டெஸ் என்ற பொறியாளரைக் கடத்திச் சென்றது. தனது கணவரை மீட்க காவல்துறையை மட்டும் நம்பியிருக்க விரும்பாத அவரது மனைவி யாதிரா கில்லர்மோ கார்சியா, பதற்றமடையாமல் ஊர் மக்களின் ஆதரவோடு ஒரு துணிச்சலான திட்டத்தைத் தீட்டினார்.
யாதிரா கிராம மக்களின் உதவியுடன், அந்த கேங்ஸ்டர் கும்பலின் தலைவனான எல் தெக்விலெரோவின் தாயார் டோனா ஃபெலிக்ஸ் என்பவரையே பிணைக் கைதியாகப் பிடித்தார். தொடர்ந்து ஊடகங்களில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்ட யாதிரா, “உன் தாயார் என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்; என் கணவரை நீ பாதுகாப்பாக விடுவித்தால் மட்டுமே உனது தாயாரை நான் ஒப்படைப்பேன்” என்று அந்த கேங்ஸ்டருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
கும்பல் தலைவனின் தாயாரே கடத்தப்பட்ட சம்பவம் பரவியதையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இறுதியாக இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து, கேங்ஸ்டர் தனது கணவரை விடுவிக்க, பதிலுக்கு யாதிராவும் அவரது தாயாரை பாதுகாப்பாக ஒப்படைத்தார். கணவருக்காக கேங்ஸ்டரின் தாயாரையே கடத்தி மீட்ட இந்த அசாதாரண சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
