LATEST NEWS
“இப்ப நிதி தராவிட்டால்… ராணுவத்தில் கடுமையான பற்றாக்குறை வரும்..!” கதறும் பென்டகன்… முரண்டு பிடிக்கும் செனட் சபை..!!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு இதுவரை சுமார் ரூ. 3.57 லட்சம் கோடி செலவாகியுள்ளதாக பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அமெரிக்க செனட் சபையில் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கைகளால் குறைந்த பென்டகனின் வளங்களை மீண்டும் நிரப்பவும் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ள கூடுதல் நிதிக்கும், குடியரசுக் கட்சியின் 95 பில்லியன் டாலர் பட்ஜெட் தொகுப்புக்கும் ஒப்புதல் அளிக்குமாறு செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவிடம் அவர் வலியுறுத்தின
ஆனால், இந்த நிதிக்கோரிக்கைக்கும் அதிபர் டிரம்பின் போர் உத்திக்கும் ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மூத்த செனட் உறுப்பினர் பாட்டி முர்ரே பேசுகையில், “போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று டிரம்ப் 40 முறைக்கும் மேல் கூறிய நிலையில், தற்போது போர் மீண்டும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதோடு, கூடுதலாக 70 பில்லியன் டாலர் கேட்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும், அமெரிக்கா மற்றொரு முடிவில்லாப் போரில் நுழையும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, இந்த பட்ஜெட் தீர்மானத்தை எந்த மாற்றமும் இன்றி உடனடியாக அங்கீகரிக்குமாறு வெள்ளை மாளிகையும் அதிபர் டிரம்பும் சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளனர். அதே வேளையில், ஈரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த பென்டகனின் அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் பாதுகாப்புச் செயலரின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கான நிதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் செனட் உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
