LATEST NEWS
“என்கிட்டயே ஆதாரத்தைக் கேக்குறீங்களா?” சவால் விட்ட உதயநிதி… ஆப்பு வைக்க ரெடியான விஜய்… லஞ்ச ஒழிப்புத்துறையை களமிறக்கி அடித்த அதிரடி ‘செக்..!!
சட்டப்பேரவையில் தவெக அரசு மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்துத் தகுந்த ஆதாரங்களைத் திரட்டுமாறு உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, “முதலமைச்சர் திரைப்படத்தைப் போலப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, முந்தைய ஆட்சியின் மீது சாட்டும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் காரசாரமாகச் சவால் விடுத்திருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சைத் தனக்குக் கிடைத்த நேரடி சவாலாக எடுத்துக்கொண்ட முதலமைச்சர் விஜய், தனது முதன்மைச் செயலாளர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சியினர் நீதிமன்ற ஆவணங்களைக் கேட்கிறார்கள் என்பதால், முந்தைய ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒன்றுவிடாமல் சட்டப்படி சேகரித்துத் தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருவாய்த்தறை அதிகாரிகள் முந்தைய திமுக ஆட்சியில் கையெழுத்தான முக்கியக் கோப்புகள், டெண்டர் விவரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களைத் தீவிரமாகத் திரட்டி வருகின்றனர். இதன் மூலம் அடுத்தகட்டமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் லஞ்ச ஒழிப்பு வழக்குகளும் பாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் உச்சகட்டப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
