LATEST NEWS
உங்கள் ஊர் அரசு ஆஸ்பத்திரி இதில் இருக்கா..? தாய்மாமன் தங்க மோதிர திட்டம்…! பயன்பெறும் 94 மருத்துவமனைகளின் லிஸ்ட் இதோ..!!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் சீர் வரிசை’ திட்டத்தின் கீழ், ஒரு தங்க மோதிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு ரூ.755.89 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சரால் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் சீராகச் சென்றடைவதற்காக, மாநிலம் முழுவதும் 94 மைய அரசு மருத்துவமனைகளின் பட்டியல் மண்டல மற்றும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
