LATEST NEWS
மகளிருக்கு ஜாக்பாட்..! ‘சிங்கப்பெண்கள்’ பெயரில் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்..!!
தமிழ்நாட்டில் இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்திற்காக, ‘சிங்கப்பெண்கள்’ என்ற பெயரில் புதிய கடனுதவித் திட்டத்தை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, பெண்களுக்கான கடனுதவித் தொகை இடைத்தரகர்கள் இன்றி அவர்களின் வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாகச் செலுத்தப்படும். மேலும், ‘சிங்கப்பெண்கள்’ திட்டத்திற்காக வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
