“அந்த ஆசையில்” வாரம் 3 நாள் முதல் மனைவி.. 3 நாள் 2வது மனைவி.. பஞ்சாயத்தின் விநோத ‘3-3 பார்முலா’.. ஒரே வாரத்தில் கடையை சாத்திய சின்ன வீடு… இப்போ யாருமில்லாம தவிக்கும் கணவன்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த ஆசையில்” வாரம் 3 நாள் முதல் மனைவி.. 3 நாள் 2வது மனைவி.. பஞ்சாயத்தின் விநோத ‘3-3 பார்முலா’.. ஒரே வாரத்தில் கடையை சாத்திய சின்ன வீடு… இப்போ யாருமில்லாம தவிக்கும் கணவன்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் இரண்டு திருமணம் செய்து கொண்ட நபரின் குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க பஞ்சாயத்து விதித்த ‘வாரம் 3 நாட்கள்’ ஒப்பந்தம் ஒரே வாரத்தில் தோல்வியடைந்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ராம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு முதல் திருமணம் நடந்து, அதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வாரிசு வேண்டும் என்ற ஆசையில் அவர் முதல் மனைவியின் அனுமதியின்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பெண் குழந்தைகளே பிறந்தன.

இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு அந்த நபர் முதல் மனைவியையும் குழந்தைகளையும் கவனிக்காமல், அவர்களின் குடும்பச் செலவுகளுக்குப் பணம் தராமல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பொருளாதாரத் தட்டுப்பாடும், கடுமையான வாக்குவாதங்களும் எழுந்ததைத் தொடர்ந்து தடியாலா பகுதியில் உள்ளூர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அந்தப் பஞ்சாயத்தில், கணவன் வாரத்தில் தலா 3 நாட்கள் வீதம் இரண்டு மனைவிகளுடனும் மாறி மாறி வாழ வேண்டும் என்றும், மீதமுள்ள 1 நாளை அவனது விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் கழிக்கலாம் என்றும் ஒரு விநோதமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு மூன்று தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதித்தனர்.

Advertisement

பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிய ஏழே நாட்களில் கதையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த விநோத ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்த இரண்டாவது மனைவி, தனது இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு, மற்றொரு சிறிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு திடீரென வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டார். கணவன் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல் துறையினருக்கு இதுவரை எந்தவொரு எழுத்துப்பூர்வப் புகாரும் வரவில்லை என்றும், புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடியாலா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in