LATEST NEWS
CM அங்கிள்… CM அங்கிள்…! அரிசி விலை ஏறிப்போச்சு… டெல்டா காஞ்சி போச்சு…பிரேமலதா கையில் எடுத்த போராட்டம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக சார்பில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் காவிரி நீரைப் பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து தீவிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “CM அங்கிள்… CM அங்கிள்… அரிசி விலை ஏறிப்போச்சு… டெல்டா காஞ்சி போச்சு” என கோஷங்களை எழுப்பித் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
