ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! இனி ஞாயிற்றுக்கிழமை லீவ்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! இனி ஞாயிற்றுக்கிழமை லீவ்..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

Published

on

சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் இயங்கும் ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, விரிவான அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளின் செயல்பாட்டு நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை என மாற்றி அமைக்குமாறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளுக்குப் பொது விடுமுறை அறிவிக்கக் கோரியும் ஊழியர்கள் தரப்பில் நீண்டநாட்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

தற்போது சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள் காலை 8:30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டு வருவதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கடைகளுக்கான புதிய பணி நேர அட்டவணை விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in