BREAKING: வசமாக சிக்கிய கொளத்தூர் தவெக MLA.. அதிரடி கைது..? பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: வசமாக சிக்கிய கொளத்தூர் தவெக MLA.. அதிரடி கைது..? பெரும் பரபரப்பு..!!

Published

on

சென்னை பெரம்பூர் பகுதியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ரியாஸ் என்பவரைத் தாக்கிய சம்பவத்தில், தவெகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் ஆதரவாளரான ஜமால் முகமது உட்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜமால் முகமது குறித்து வழக்கறிஞர் ரியாஸ் சமூக வலைத்தளத்திலோ அல்லது பொதுவெளியிலோ அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று வழக்கறிஞரைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் ரியாஸ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ள நிலையில், போலீஸார் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in