மருத்துவக் கனவு நனவாகும் நாள்..! நாளை தொடங்கும் MBBS, BDS கலந்தாய்வு… முக்கிய நேர அட்டவணை வெளியீடு..! மிஸ் பண்ணாதீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவக் கனவு நனவாகும் நாள்..! நாளை தொடங்கும் MBBS, BDS கலந்தாய்வு… முக்கிய நேர அட்டவணை வெளியீடு..! மிஸ் பண்ணாதீங்க..!!

Published

on

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நாளை நடைபெறும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த நேர அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 8:00 மணிக்கு விளையாட்டுப் பிரிவினருக்கும், காலை 8:30 மணிக்கு முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நேரத்தில், நீட் தேர்வில் 599 முதல் 433 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்கள் உரிய நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in