LATEST NEWS
“மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு” தவெக நிர்வாகி உள்பட 4 பேர் சிக்கியது எப்படி? -வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பரபரப்பு அறிக்கை..!!
நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 கிலோ ‘கிரிஸ்டல் மெத்’ என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலோர கிராமம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளை, கடல் வழியாக நடுக்கடலில் கைமாற்றி இலங்கைக்குக் கடத்த முயன்ற கும்பலின் சதியை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இந்தச் சோதனையின் போது, 6 பைகளில் வைக்கப்பட்டிருந்த 27 போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து, மிகப்பெரிய கடத்தல் வலையமைப்பை உடைத்துள்ளதாக DRI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி பூபாலன் உட்பட 4 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
