என்னடா நடக்குது இங்க..! இது தண்ணீரா இல்லை பெட்ரோலா..? தீப்பிடித்து எரியும் வினோத நீரைக் கண்டு பீதிபடைந்த கிராம மக்கள்..! நம்பவே முடியாத பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னடா நடக்குது இங்க..! இது தண்ணீரா இல்லை பெட்ரோலா..? தீப்பிடித்து எரியும் வினோத நீரைக் கண்டு பீதிபடைந்த கிராம மக்கள்..! நம்பவே முடியாத பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஹேண்ட்பம்ப் (கைகுழாய்) ஒன்றிலிருந்து நீருடன் சேர்த்து எண்ணெய் போன்ற ஒரு பொருள் வெளியேறும் விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமேர்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கௌரிகலா கிராமத்தில் வசிக்கும் அனில் துபே என்பவரின் வீட்டில் உள்ள ஹேண்ட்பம்பில் இருந்து இந்தத் தண்ணீர் வெளிவந்துள்ளது. அனில் துபே தனது கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டி குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் ஏதோ அசாதாரணமான தன்மையை உணர்ந்துள்ளார். அப்போது தண்ணீரில் எண்ணெய் போன்ற ஒரு பிசுபிசுப்பான தன்மை இருப்பதை அவர் கண்டறிந்து, உடனடியாக அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு கிராம மக்கள் பெருமளவில் கூடினர். அப்போது சிலர் ஹேண்ட்பம்பில் இருந்து பாத்திரத்தில் பிடிக்கப்பட்ட தண்ணீரில் தீக்குச்சியை வைத்து சோதித்துப் பார்த்தபோது அதில் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறி, அது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்ற அந்தப் பொருளின் கலவையில் தீப்பிடித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது பெட்ரோல் அல்லது டீசலா என்ற சந்தேகத்தை கிராம மக்கள் எழுப்பினாலும், வெறும் வீடியோக்கள் அல்லது சோதனைக் காட்சிகளை மட்டும் வைத்து அந்தப் பொருள் என்னவென்பதை உறுதியாகக் கூற முடியாது.

Advertisement

இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியவும், அந்தத் தண்ணீரில் உள்ள சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டறியவும் அறிவியல் பூர்வமான பரிசோதனைகள் அவசியமாகின்றன. ஹேண்ட்பம்பில் இருந்து வெளிவரும் நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அருகில் எங்குமிருந்து ஏதேனும் இரசாயனப் பொருட்கள் கசிந்து நிலத்தடி நீருடன் கலக்கிறதா அல்லது இதன் பின்னணி என்ன என்பது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in