“ரூ.1,500 தொட்டிக்கு ரூ.15,000 பில்லா..?” பீகாரில் மனுஷங்களை விடக் குப்பைத்தொட்டி தான் VVIP..!” இணையத்தில் வைரலாகும் ரோகிணி ஆச்சார்யாவின் X பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரூ.1,500 தொட்டிக்கு ரூ.15,000 பில்லா..?” பீகாரில் மனுஷங்களை விடக் குப்பைத்தொட்டி தான் VVIP..!” இணையத்தில் வைரலாகும் ரோகிணி ஆச்சார்யாவின் X பதிவு..!!

Published

on

பீகாரில் குப்பைத்தொட்டி கொள்முதலில் கூட ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் மகள் ரோகிணி ஆச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சந்தையில் ரூ.1,500 மதிப்புள்ள ஒரு குப்பைத்தொட்டி, அரசுத் திட்டத்தில் ரூ.15,000-க்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பீகாரில் மனிதர்களை விடக் குப்பைத்தொட்டி தான் VVIP ஆக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

தொடர்ந்து பாஜக அரசை நோக்கி கேள்வி எழுப்பிய அவர், இது தெருக்களில் உள்ள குப்பையைச் சேகரிக்கும் பெட்டியா அல்லது மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு அரசு கஜானாவை காலி செய்வதற்கான ஒரு புதிய தந்திரமா என்று வினவியுள்ளார். சாதாரணக் குப்பைத்தொட்டி கொள்முதலில் கூட இவ்வளவு பெரிய அளவில் முறைக்கேடு நடந்துள்ளது பீகார் அரசு நிர்வாகத்தின் சீர்கேட்டையே காட்டுவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in