LATEST NEWS
“மச்சி கொஞ்சம் வழி விடு… நானும் உள்ள வரேன்..!” நண்பனைக் காப்பாற்றப்போய் ஒரே நாற்காலியில் தானும் சிக்கிய பரிதாபம்..! வைரலாகும் சீன நண்பர்களின் லீலைகள்…!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. சிறிய அலட்சியம் கூட சில சமயங்களில் பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளது. சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் காத்திருப்புப் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு நபரின் கழுத்து, நாற்காலியின் கைப்பிடிக்கும் பின்பகுதிக்கும் இடையே எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்டது. அவர் எவ்வளவு முயன்றும் தன்னால் வெளியே வர முடியவில்லை.
சீன ஊடகமான ‘சினா’ வெளியிட்ட அறிக்கையின்படி, மருத்துவமனையில் அமர்ந்திருந்த அந்த நபர் எழ முயன்றபோது அவரது கழுத்து நாற்காலியின் இரண்டு பகுதிகளுக்கு இடையே சிக்கியது. அவர் வெளியே வரப் போராடுவதைக் கண்ட அவரது நண்பர் உதவிக்காக ஓடிவந்தார். நண்பர் முதலில் அவரை இழுத்து வெளியே எடுக்க முயன்றார். அது பலனளிக்காததால், தானும் அதே வழியில் தலையை விட்டுப் பார்த்தால் எளிதாக வெளியே எடுத்துவிடலாம் என்று தவறாகக் கணக்கிட்டார். ஆனால், அவர் தலையை அதில் நுழைத்தவுடனே அவரது கழுத்தும் அதே நாற்காலியில் மாட்டிக்கொண்டது.
https://www.instagram.com/reel/DbsLpj-OBgZ/?utm_source=ig_web_button_share_sheet
இதனால், அங்கு ஒருவரைக் காப்பாற்றப்போய் இருவருமே நாற்காலியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் இருவரின் கழுத்தும் ஒரே நாற்காலியில் சிக்கியிருப்பதைக் காண முடிகிறது. பின்னர், அங்கிருந்த மருத்துவமனைப் பணியாளர்கள் விரைந்து வந்து இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆபத்தான சூழலில் சிக்கியுள்ள ஒருவருக்கு உதவும்போது, யோசிக்காமல் அதே முறையை நாமும் முயற்சிப்பது ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
