LATEST NEWS
“ஆசைக்கு அளவே இல்லையா..? வெறும் சுண்ணாம்பு வைக்க தங்க டப்பாவா..?!” விலையைக் கேட்டு மிரண்டுபோன நெட்டிசன்கள்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!
வெற்றிலை பாக்குடன் சேர்த்துப் பயன்படுத்தும் சுண்ணாம்பை வைப்பதற்காக ஒரு நபர் ரூ.7.75 லட்சம் செலவில் தங்கத்திலான பிரத்யேக சுண்ணாம்பு டப்பாவை தயாரித்துள்ள விசித்திரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பத்ரிநாத் சுக்லா என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நபர் ஒருவர் முற்றிலும் தங்கத்தால் ஜொலிக்கும் ஒரு சிறிய பெட்டியை கேமரா முன் காட்டுகிறார். தொடக்கத்தில் இதன் விலை சுமார் ரூ.7 லட்சம் எனக் கூறப்பட்டாலும், அந்த டப்பாவின் உரிமையாளர் தலையிட்டு, அதன் உண்மையான மதிப்பு ரூ.7.75 லட்சம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். வெறும் சுண்ணாம்பை வைப்பதற்கான ஒரு சிறிய டப்பாவிற்குப் பல லட்சங்களைச் செலவழித்த இந்த நபரின் ஆடம்பரமான பொழுதுபோக்கு நெட்டிசன்கள் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DcNG2NsTnhG/?utm_source=ig_embed&ig_rid=AM849Nvwe9rtfEStf0ef7pu
இருப்பினும், இந்த வீடியோவில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க டப்பாவை விடவும், அந்த உரிமையாளரின் விசித்திரமான தாடி வடிவமைப்புதான் சமூக ஊடகப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மார்வெல் சினிமாக்களில் வரும் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரமான ‘தானோஸ்’பாணியில் அவர் தனது தாடியை வடிவமைத்துள்ளார். இதனால் கமெண்ட் பகுதியில் பல பயனர்கள் அவரை ‘சர் ஜி’ என்று கூப்பிடுவதற்குப் பதிலாக ‘தானோஸ்’ என்றும், ‘கைனி லிவர்’ என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டு வருகின்றனர். ஆசைக்கும் ஆடம்பரத்திற்கும் எல்லையே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நபரின் வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
