LATEST NEWS
CM சார்..! நான் File ஓபன் பண்ண சொல்லி 72 மணி நேரம் மேலே ஆச்சு… ஆனா இன்னும் திறக்கலையே ஏன்..? யாரை மிரட்டப் பாக்கீங்க்.? முதல்வர் விஜய்யை விமர்சித்த உதயநிதி..!!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்குக் கடுமையான சவால் விடுத்துப் பேசினார் “முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 துறைகளின் கோப்புகள் எனது மேஜையில் ஆதாரங்களுடன் தயாராக உள்ளன” என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கூறியிருந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விவாதம் அரங்கேறியது
சட்டமன்றத்தில் காரசாரமாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அந்த 3 துறைகளின் ஃபைல்ஸையும் உடனே திறந்து காட்டுங்கள்; உங்களை வேண்டாம் என்று யார் தடுத்தது?” என நேரடியாகக் கேள்வி எழுப்பினார் . ஆளுங்கட்சியினர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், “அதிமுகவினருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் வரும்போது வெறும் ‘ஷோபா காட்டுகிறீர்கள், ஆனால் திமுகவினரை மட்டும் ஃபைல்களை கையில் வைத்திருப்பதாகக் கூறி மிரட்டப் பார்க்கிறீர்களா?” என்று மிகக் காட்டமாகச் சாடினார் .
மேலும் தனது சவாலைத் தீவிரப்படுத்திய உதயநிதி, “உங்களுக்குத் தைரியம் இருந்தால் அந்த ஃபைல்களை ஓபன் பண்ணுங்கள் என்று நாங்கள் சவால் விடுத்து 72 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் இதுவரை நீங்கள் எதையும் திறக்கவில்லை” என்று ஆளுங்கட்சியின் தாமதத்தைக் கேலி செய்தார் . ஆதாரங்கள் இருந்தால் வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும், திமுக இத்தகைய வெற்று அச்சுறுத்தல்களைக் கண்டு ஒருபோதும் பயப்படாது என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்
