“உனக்கு இங்க என்ன வேலை..?” சிறையில் இருக்க வேண்டிய VIP கைதி.. மருத்துவமனை விஐபி அறையில் காதலியுடன்… நீதிபதி நடத்திய திடீர் ரெய்டு.. உண்மையை உடைத்த காதலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உனக்கு இங்க என்ன வேலை..?” சிறையில் இருக்க வேண்டிய VIP கைதி.. மருத்துவமனை விஐபி அறையில் காதலியுடன்… நீதிபதி நடத்திய திடீர் ரெய்டு.. உண்மையை உடைத்த காதலி..!!

Published

on

கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில், லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலப் பதிவுத்துறை அதிகாரி முகமது ஹுசைன் என்பவர் சிறப்பு அறையில் தனது காதலியுடன் சொகுசாகத் தங்கியிருந்தது திடீர் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. வழக்கமான நடைமுறைப்படி சிறையில் அடைக்கப்பட வேண்டிய அவர், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு மண்டியா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

மண்டியா மாவட்ட நீதிபதி சி. சந்திரசேகர் மருத்துவமனையில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, முகமது ஹுசைன் தங்கியிருந்த சிறப்பு அறைக்குள் இளம் பெண் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணிடம் நீதிபதி நேரடியாக விசாரணை நடத்தியபோது, தான் ஹுசைனின் காதலி என்று அவர் ஒப்புக்கொண்டார். மேலும், ஹுசைனுக்கு மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் அளவுக்கு எந்தவொரு உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்று அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

கைதி ஒருவரை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தாமல் சிறை நிர்வாகம் மருத்துவமனைக்கு மாற்றியதும், அவருக்கு விஐபி அறை ஒதுக்கி காதலியைச் சந்திக்க அனுமதித்ததும் பாதுகாப்பு நடைமுறைகளில் உள்ள பெரும் குளறுபடியைக் காட்டுகிறது. இதுகுறித்து சிறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கடும் அதிருப்தி வெளியிட்ட நீதிபதி, இந்த விதிமீறல் தொடர்பாக முழுமையான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in